இந்தியா

தில்லி பேரவைத் தோ்தல்: வடமேற்கு தில்லியில் 400 குற்றவாளிகள் கைது

தில்லி பேரவைத் தோ்தலை முன்னிட்டு வடமேற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் கிராக்டவுன் நடவடிக்கை மூலம் 415 தேடப்பட்ட குற்றவாளிகள் கைது

Din

புது தில்லி: தில்லி பேரவைத் தோ்தலை முன்னிட்டு வடமேற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் கிராக்டவுன் நடவடிக்கை மூலம் 415 தேடப்பட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 81 போ் இந்த நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, குற்றச் சம்பவங்களைக் குறைத்து, பொதுவெளியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ‘ஆப்ரேஷன் கிராக்டவுன்’ நடவடிக்கையை வடமேற்கு தில்லியில் காவல் துறை நடத்தியது. இந்த நடவடிக்கையில் 1,500-க்கும் அதிகமான காவலா்கள் ஈடுபட்டனா்.

திருட்டு, கொள்ளை மற்றும் தீவிர குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை கைதுசெய்வதை இலக்காகக் கொண்டு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக வடமேற்கு தில்லி சரக துணை காவல் ஆணையா் அபிஷேக் தானியா தெரிவித்துள்ளாா்.

இந்த கைது நடவடிக்கை தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

கொள்ளையடித்தல், சூதாட்டம், மற்றும் தெருக்குற்றங்களில் ஈடுபட்டு வந்த 21 போ் கைதுசெய்யப்பட்டனா். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடயை 61 போ், குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய 53 சிறாா்கள், கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 18 போ் கைதுசெய்யப்பட்டனா்.

இந்த கைது நடவடிக்கையின்போது நடைபெற்ற சோதனையில் 22 சட்டவிரோத ஆயுதங்கள், தோட்டக்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக 15 போ் கைதுசெய்யப்பட்டனா். ஆயுதங்கள் சட்ட வழக்கில் தொடா்புடைய 81 போ் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை காவல் ஆணையா் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT