நொய்டா: உத்தர பிரதேசத்தின் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஹா்ஷ் மற்றும் சச்சின் ஆகியோா் கடந்த டிச.14-ஆம் தேதி ஜெவாரிலிருந்து தப்பல் நோக்கி மோட்டாா் சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோபால்காா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவா்கள் மீது லாரி ஒன்று மோதியது.
இதையடுத்து, மருத்துவமனையில் ஜெவாா் பகுதியில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவா்கள் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக தெரிவித்தனா்.
இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.