ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா வாக்கெடுப்பு Sansad
இந்தியா

பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங்கிரஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா வாக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் விமர்சனம்..

DIN

பாரதிய ஜனதா கட்சியால் நேற்றைய மின்னணு வாக்கெடுப்பில் 272 வாக்குகளைகூட பெற முடியாத நிலையில், எவ்வாறு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிப்பதற்காக முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், மசோதாவுக்கு ஆதரவாக 220 வாக்குகள் மட்டுமே கிடைத்த நிலையில், சில பாஜக எம்பிக்கள் வாக்குகள் மாறியுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து வாக்கு சீட்டு மூலம் பெறப்பட்டு இறுதியாக 269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

“அவர்களால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை. அடிப்படை பெரும்பான்மைகூட அவர்களுக்கு கிடையாது. அவர்களால் எப்படி மசோதாவை நிறைவேற்றும்போது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும்.

272 உறுப்பினர்களின் ஆதரவைகூட பெறமுடியாதவர்களால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெறுவது நடக்காத ஒன்று” என்றார்.

மேலும், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பற்றி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“யார் யாரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது நேற்று தெளிவாகிவிட்டது. அம்பேக்ரை உள்துறை அமைச்சர் அவமதித்துள்ளார். அம்பேத்கர் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுள் பெயரை கூறியிருந்தால் நல்லது நடந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் அல்லாமல் வேறென்ன? பிரதமரும், உள்துறை அமைச்சரும், பாஜகவும் அம்பேத்கரை இழிவுபடுத்தி காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறார்கள் என்பதுதான் உண்மை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT