ஜிமெயில் 
இந்தியா

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்ட எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பற்றி..

DIN

எங்கும் மோசடி, எதிலும் மோசடி என்ற அளவில் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அதுபோன்ற எச்சரிக்கையை ஜிமெயில் வெளியிட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், ஜிமெயில் பயனாளர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்புவிக்க சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அது குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வையும் ஜிமெயில் ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜிமெயிலின் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மிகவும் நன்றி. கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக மோசடிகள் 35 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் மூலம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு முன்பு இன்பாக்ஸில் வந்து குவியும் மோசடி மெயில்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோனற் அபாயகரமான மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை அடைவதற்கு முன்பே தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷ்ஷிங் மோசடி.. பரிசு விழுந்ததாக, உங்கள் ஆர்டரை உறுதி செய்வதற்காக என்று வரும் மின்னஞ்சல்கள்.

பொருள்களை டெலிவரி செய்வது தொடர்பான போலி மின்னஞ்சல்.. டெலிவரி நிறுவனத்தின் பெயரில் விலை மதிப்புள்ள பொருளை டெலிவரி செய்வதற்கான உறுதிப்படுத்துதல் போன்று வரும் மின்னஞ்சல்கள் போன்றவற்றை மக்கள் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம். திறந்தாலும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

தற்போது ஜிமெயிலில் இதுபோன்ற மோசடி மின்னஞ்சல்கள் வடிகட்டும் வசதி உள்ளது. அதுபோன்ற மின்னஞ்சல்கள் வெளிநபரிடமிருந்து அல்லது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மின்னஞ்சல் என்ற அடையாளத்துடன் உங்களுக்குக் காணக்கிடைக்கும்.

இரண்டு வழி பாதுகாப்பை ஜிமெயிலை திறக்க பயன்படுத்துங்கள். இதனால், பாஸ்வேர்டை ஒருவர் தெரிந்துகொண்டாலும் அதனை திறக்க முடியாது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

அண்ணா பிறந்தநாள்! அன்பில் மகேஸ் மரியாதை!

வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு!

திமுகவின் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக அல்ல! - M.K. Stalin

SCROLL FOR NEXT