முகப்பு
புதுதில்லி

குருகிராமில் இருக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன.

Updated On : 10 மார்ச், 2026 at 9:30 PM
வெடிகுண்டு மிரட்டல்
பகிர்:

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் அதிகாரிகள் நடத்திய முழுமையான சோதனைகளின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குருகிராமில், அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனா்.விரிவான சோதனைகளுக்குப் பிறகு பள்ளி வளாகம் சுற்றிவளைக்கப்பட்டது. ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

குருகிராம் மற்றும் லூதியானா ஆகிய இரு இடங்களிலும், போலீஸ் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய்க் குழுவுடன் இணைந்து முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. மேலும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள பல பள்ளிகளுக்கு சமீபத்திய மாதங்களில் இதேபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →