பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவ (கோப்பு படம்). 
இந்தியா

இது ம.பி. அவலம்.. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குழாய் திருட்டு.. 12 சிசுக்கள் பாதிப்பு

மத்திய பிரதேச மாநில மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குழாய் திருடப்பட்டதால் 12 சிசுக்கள் பாதிப்பு

DIN

புது தில்லி: மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் குழாய்களை சிலர் திருடிச் சென்றதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 12 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் சேவை அவசியம் என்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளுக்கு, திருடர்கள் சிலர் எடைக்குப் போடுவதற்கு மருத்துவமனையின் குழாய்களை திருடிச்சென்றதால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோதுதான் மருத்துவமனை ஊழியர்கள் என்ன நடந்தது என்று ஆய்வு செய்தபோது, குழாய்கள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காப்பரால் ஆன 10 முதல் 15 அடி நீளமுள்ள குழாய்கள் திருடப்பட்டதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஆக்ஸிஜன் செல்லும் இந்த குழாய்கள் திருடப்பட்டிருப்பதால், ஆக்ஸிஜன் செல்லாமல் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ததால் இழப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT