லாரி - ஆட்டோ ரிக்சா மோதியதில் 5 பேர் பலி 
இந்தியா

லாரி - ஆட்டோ ரிக்சா மோதியதில் 5 பேர் பலி, 5 பேர் காயம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் பகுதியில் லாரியும் ஆட்டோ ரிக்சாவும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர்,

DIN

ஷாஜஹான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் பகுதியில் லாரியும் ஆட்டோ ரிக்சாவும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர் என்று உ.பி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கூறுகையில், "ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் பகுதியில் லாரியும் ஆட்டோ ரிக்சாவும் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் லாரியில் இருந்த பத்து பேரில் ஐந்து பேர் காயமடைந்னர்.

லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். "இரண்டு குழந்தைகளுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் பட்சத்தில் உயர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று எஸ்பி கூறினார்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கஸ்கஞ்சியில் இருந்து புதன்கிழமை திருமண விழாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT