அமலாக்கத்துறை 
இந்தியா

கேஜரிவாலை விசாரிக்க அமலாக்கத் துறைக்குத் துணைநிலை ஆளுநர் அனுமதி!

கலால் கொள்கை வழக்கில் கேஜரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்கலாம்..

DIN

கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் வழக்குத் தொடர்பாக அமலக்கத்துறைக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

தில்லியில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கலால் கொள்கை தொடர்பான வழக்கை விசாரிக்க கேஜரிவால் சார்பில் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டது. இதையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி கேஜரிவாலுக்கு எதிராக கலால் கொள்கை வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை துணைநிலை ஆளுநரிடம் அனுமதி கோரியது.

இந்த நிலையில், கலால் கொள்ளை வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்குத் துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

சமீபத்தில் தில்லி உயர் நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு வழக்குகளிலும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT