உணவு இயந்திரத்தில் சிக்கி பெண் பலி 
இந்தியா

மகாகாளேஷ்வர் கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

கோயில் இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம்..

DIN

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனி நகரில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் உருளைக்கிழங்கு உரித்தல் இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாகாளேஷ்வர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கோயிலின் அன்னதானக் கூடம் அமைந்துள்ளது. இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது. கோயில் நிர்வாகத்தினர் வெளியாள்களை வைத்து உணவு தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கோயிலின் உணவுக்கூடத்தில் பணிபுரியும் ஊழியர்களுள் ஒருவரான ரஜினி காத்ரி(30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் துப்பட்டா கழுத்தை இறுக்கி உயிருக்குப் போராடிய நிலையில் பெண் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த இயந்திரத்தை நிறுத்தினார்கள். பின்னர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இறந்த பெண் நகரின் கேசவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. இவர் கோயிலின் உணவு கூடத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT