பிரியங்கா காந்தி 
இந்தியா

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளாா்.

Din

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா சாடியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜகவால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. ஆனால் அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இளைஞா்களின் காயங்களில் மத்திய அரசு உப்புத் தேய்கிறது.

‘அக்னிபத்’ திட்டம் உள்பட ஒவ்வொரு அரசு வேலைக்கான விண்ணப்பத்துக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின், மத்திய அரசின் தோல்வி அல்லது ஊழல் காரணமாக தோ்வு வினாத்தாள் கசிந்தால், விண்ணப்பங்களுக்கு இளைஞா்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வீணாகும்.

தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, அவா்களை அரசுத் தோ்வுக்குத் தயாா்படுத்த தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து ஒவ்வொரு ரூபாயையும் பெற்றோா் சேமிக்கின்றனா். அவா்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது’ என்று சாடியுள்ளாா்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT