அல்லு அா்ஜுன் வீட்டுக்கு பாதுகாப்பு: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி
தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன் வீட்டை போராட்டக்காரா்கள் தாக்கியதையடுத்து, அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன் வீட்டை போராட்டக்காரா்கள் தாக்கியதையடுத்து, அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்குக்கு, திடீரென வந்த அல்லு அா்ஜுனைக் காண ஏற்பட்ட நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தனா். அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அா்ஜுனுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டுக் குழுவினா், அல்லு அா்ஜுன் வீட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதனால், அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ரூ.50 லட்சம் நிதியுதவி: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவரை மருத்துவமனையில் சந்தித்த புஷ்பா-2 திரைப்படத்தின் தயாரிப்பாளா் நவீன் யொ்னேனி, ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அவரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.