இந்தியா

எம்ஜிஆர் நினைவுநாளில் பவன் கல்யாண் சொன்ன விஷயம்..!

வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டி! -எம்ஜிஆருக்கு ஆந்திர பிரதேச துணை முதல்வர் புகழாரம்

DIN

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரை அவரது நினைவுநாளான இன்று(டிச. 24) நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

ஜன சேனை கட்சித் தலைவர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய மரியாதையை உரித்தாக்குகிறேன். தமிழ் திரையுலகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் அவர். தன்னுடைய வாழ்க்கையை தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணித்தவர்.

தமிழ்நாடு மாநில மேம்பாட்டின் மீதான அன்னாரது ஒப்பில்லா ஈடுபாடும், ஈடு இணையற்ற தலைமைப் பண்பும் எனக்கு தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கிறது.

அன்னாரது சேவையும் அர்ப்பணிப்பும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாநில நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்கும் அதேவேளையில், மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைப்பிடிக்க அவர் கையாண்ட புதுமையான அணுகுமுறை ‘ஜன சேனை’ கட்சியின் வழிகாட்டி கொள்கையாக விளங்குகிறது.

சேவை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறார் அவர். மக்கள் அவரை பாசத்துடன் புரட்சித் தலைவர் எனக் குறிப்பிடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார் பவன் கல்யாண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT