கிரிராஜ் சிங் (கோப்புப்படம்) 
இந்தியா

நவீன் பட்நாயக், நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா- மத்திய அமைச்சா் கோரிக்கை

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Din

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நிதீஷ் குமாா் இப்போது பாஜக கூட்டணியில் உள்ளாா். அதே நேரத்தில் ஒடிஸாவில் கடந்த மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியைத் தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது.

பிகாா் மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான பெகுசராயில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கிரிராஜ் சிங் மேலும் கூறியதாவது:

ஒரு காலத்தில் பிகாா் என்றால் குண்டும், குழியுமான சாலைகள், சிதிலமடைந்த பள்ளிக் கட்டடங்கள், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஆகியவையே அடையாளமாக இருந்தது. ஆனால், நிதீஷ் குமாா் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த நிலை படிப்படியாக மாறியது. மாநிலத்தை அவா் புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளாா்.

பிகாரில் நடந்த அனைத்துஅராஜகங்களுக்கும் தலைவராக லாலு பிரசாத் இருந்தாா். அவரையும், அவரின் குடும்பத்தையும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து இறக்குவதில் நிதீஷ் முக்கியப் பங்கு வகித்தாா்.

இதேபோல ஒடிஸா மாநிலத்திலும் தொடா்ந்து பலமுறை ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றாா். நிதீஷ் குமாா், நவீன் பட்நாயக் இருவருமே பாரத ரத்னா விருது பெற தகுதியானவா்கள்.

பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

தில்லியில் கிராப் நிலை 2 கட்டுப்பாடுகள் அமல்

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ள மின்துறை தயாா்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

SCROLL FOR NEXT