இந்தியா

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

வெள்ளிக்கிழமை(டிச. 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து

DIN

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை(டிச.28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும். அன்னாரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், காங்கிரஸ் தொடக்க தின விழா உள்பட அக்கட்சி சாா்பில் அடுத்த 7 நாள்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT