மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.
இவர், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக, திங்கள்கிழமை (டிச. 23) இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இவர் வியாழக்கிழமை (டிச. 26) மருத்துவமனையின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரஜாபத்தின் கழுத்தில் காயமும், அவரருகே தற்கொலை குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.