முகப்பு
இந்தியா

10 ஆண்டுகளில் 7 ஐஐடி,15 எய்ம்ஸ் உருவாக்கம்

நாட்டின் உயா்கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 7 ஐஐடிக்கள், 16 ஐஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாக

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
பகிர்:

நாட்டின் உயா்கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 7 ஐஐடிக்கள், 16 ஐஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நிகழாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றியதாவது: நமது நாட்டின் வளா்ச்சி இளைஞா்களின் மேம்பாட்டை சாா்ந்தே உள்ளது. அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் பல்வேறு சீா்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல் முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பி.எம்.ஸ்ரீ.பள்ளிகள்) தரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞா்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 54 லட்சம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. உயா்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பத்தாண்டுகளில் 7 ஐஐடிக்கள், 16 ஐஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் மற்றும் 3,000 ஐடிஐக்கள் நிறுவப்பட்டுள்ளன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →