இந்தியா

பட்ஜெட் தொடர்: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

DIN

மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

2024-25-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, நிதி மசோதா 2024-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாளை காலை 11 மணிவரை மக்களவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

கமல்ஹாசன் பொறாமைப்படும் விஷயம் எது?

சாய் பல்லவி பிறந்தநாளில் சிறப்பு விடியோ வெளியிட்ட படக்குழு!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை கோரிய மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஹஜ் புனித பயணம் தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்ட முதல் குழு!

SCROLL FOR NEXT