நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 
இந்தியா

இடைக்கால பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்தித்தார்.

DIN

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்தித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளாா்.

இதற்கிடையே, மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

அவரது மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் பங்கஜ் செளத்ரி, பகவத் கிஷன்ராவ் கரத் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் சென்றனர்.
 
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT