ஆனந்த் மகிந்திரா 
இந்தியா

புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆனந்த் மகிந்திராவின் அழைப்பு

ஆற்று நீரை சுத்தப்படுத்தும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் புத்தாக்க நிறுவனங்கள் இருந்தால், தான் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.

DIN


ஆற்று நீரை சுத்தப்படுத்தும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் புத்தாக்க நிறுவனங்கள் இருந்தால், தான் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு ரோபோ போன்ற இயந்திரம், ஆற்றில் நீரில் மிதந்தபடி, கழிவுகளை எல்லாம் தன்னகத்தே இழுத்து ஆற்றை மிக எளிதாக சுத்தப்படுத்துகிறது.

அந்த விடியோவை இணைத்து, தன்னிச்சையாகவே ஒரு ரோபோ, ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பார்க்க சீன தயாரிப்பு போல உள்ளது? இப்போதே உடனடியாக இதுபோன்றதொரு கருவியை நாம் உருவாக்க வேண்டும். புத்தாக்க தொழில் நிறுவனங்கள் ஏதேனும் ஒன்று, இதனை உருவாக்கத் தயாராக இருந்தால், அதில் முதலீடு செய்ய நான் தயார் என்று பதிவிட்டு, புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகிந்திரா குழுமத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகிந்திரா. பல்வேறு வகையான வாகனத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகிந்திரா குழுமம், இந்தியாவின் முதல் 10 தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை முன்னேற்றம் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிடும் ஆனந்த் மகிந்திரா, இன்று ஆற்று நீரை சுத்தப்படுத்தும் கருவி தயாரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது புத்தாக்க நிறுவனங்கள பலவற்றுக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக மாறலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT