அசோக் கெலாட் (கோப்புப் படம்) 
இந்தியா

அசோக் கெலாட்டுக்கு கரோனா, பன்றிக்காய்ச்சல்!

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா மற்றும் பன்றிக்காயச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா மற்றும் பன்றிக்காயச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜெய்ப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து  வருகின்றனர்.

இது தொடர்பாக அசோக் கெலாட் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாள்களாக இருந்த காய்ச்சலைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனையில் எனக்கு கரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு யாரையும் என்னால் சந்திக்க இயலாது. பருவ மாற்றத்துக்கு ஏற்றவாறு அனைவரும் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி பேண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசோக் கெலாட் உடல் நிலை சீராக உள்ளதகவும், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT