இந்தியா

கோட்டா நீட் மாணவர் தற்கொலை: விடுதிக்கு சீல்!

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ராஜஸ்தான் கோட்டாவில் மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவர் கோட்டா நகரில் கஞ்சன் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஜன.23 அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

விடுதியின் அறையில் தற்கொலை செய்துகொள்ள இயலாத வகையிலான மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை. இது மாணவர்களின் பாதுகாப்புக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் எனத் தெரிவித்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோட்டா மாவட்ட ஆட்சியர் ரவீந்திர கோஸ்வாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT