கோப்புப்படம் 
இந்தியா

விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்துக் கொலை!

விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியான கொம்மாடியில் அரசு அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

DIN

விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியான கொம்மாடியில் அரசு அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

வாடகைக் குடியிருப்பில் வசித்து வரும் ரமணய்யா. இவர் வட்டாட்சியராக உள்ளார். நேற்றிரவு பணி முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார். இரவு 10.15 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை சந்திப்பதற்காக அவர் வெளியே வந்துள்ளார். 

அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அந்த நபர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

ரமணய்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டுப் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைநித்னர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை தாசில்தார் உயிரிழந்தார். 

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரமணய்யா, தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன்புதான் விஜயநகரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். 

பத்தாண்டுகளுக்கு முன் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT