இந்தியா

அஸ்ஸாமில் ரூ.11,600 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

DIN

கௌஹாத்தி : அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தலைநகர் கௌஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  

அப்போது, தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தட இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகள் மேம்படுத்தப்படும் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் ’மா காமாக்ய திவ்யா பரியோஜனா’ திட்டத்திற்கும்,  வடகிழக்குப் பிராந்தியத்தின்  விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  

மேலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.3,250 கோடி செலவில் கட்டப்படவுள்ள கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று(பிப்.4) அடிக்கல் நாட்டினார்.

அஸ்ஸாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய அமைச்சர் சர்பானந்தா ஸ்னோபால் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

திரைவிழாவில் மகாராஜா!

நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!

‘உங்கள் வாக்கு குடும்பத்தின் தலைவிதியை மாற்றும்’: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT