இந்தியா

இந்தியர்களை சோம்பேறிகள் என்று நினைத்தாரா நேரு? பிரதமர் மோடி பேச்சு!

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

DIN

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

அவர் பேசுகையில், நாட்டின் திறனை ஒருபோதும் நம்பாதுதான்  காங்கிரஸின் மனநிலை என்றும், தங்களை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவர்களாகவும், சிறியவர்களாகவும் கருதுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிக்கையில், நேரு இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் அறிவாற்றல் குறைந்தவர்களாக நினைத்திருந்ததாக குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காமல் காங்கிரஸ் வைத்திருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாகவும், குடியரசுத் தலைவரின் உரை உண்மைத் தகவலின் அடிப்படையிலானது எனவும் பிரதமர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT