இந்தியா

மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட ஹேமந்த் சோரன்!

DIN

ஜார்க்கண்ட் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற ஹேமந்த் சோரனை மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

அரசு நில மோசடி வழக்கில் தொடா்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரன் கடந்த 31-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 

ஹேமந்த் சோரனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு பிப்.2-ம் தேதி அனுமதி அளித்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன்,  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவைக்கு இன்று அழைத்து வரப்பட்டார். 

முதல்வர் சம்பயி சோரன் தலைமையிலான புதிய அரசு திங்கள்கிழமை மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

பேரவையில் சம்பயி சோரன் தலைமையிலான அரசுக்கு 47 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவாகின. 

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடைந்ததும் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஹேமந்த் சோரன் அழைத்துவரப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT