இந்தியா

இந்திய தூதரக பணியாளருக்கு காவல் நீட்டிப்பு

பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை பணத்திற்காக அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு  காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

DIN

லக்னோ: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய தூதரக பணியாளரை பிப்.7 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவலர்கள், ஞாயிற்றுக்கிழமை  சதேந்திர சிவாலை கைது செய்தனர். 

சிவால், 2021 முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.

நாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்கு பணம் பெற்றதாக பிரிவு 121ஏ கீழ் முதல் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கூடுதல் அமர்வு நீதிபதி வி.எஸ்.திருப்பதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது திருப்தியளிக்கும் வகையில் அவர் பதில்களை அளிக்கவில்லை எனவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் ஏடிஎஸ் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு, வெளியுறவு துறை மற்றும் ராணுவ தகவல்கள் குறித்து சிவால் ஐஎஸ்ஐக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT