நிலக்கரி கொண்டு செல்வோரின் சைக்கிளுடன் ராகுல்!
நிலக்கரி கொண்டு செல்வோரின் மிதிவண்டிகளை ராகுல் காந்தி பார்வையிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நிலக்கரி கொண்டு செல்வோரின் மிதிவண்டிகளை ராகுல் காந்தி பார்வையிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட ஒற்றுமைக்கான நீதிப் பயணம், மணிப்பூரில் தொடங்கி அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகாரை கடந்து ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
ஜார்கண்ட் மாநில எல்லையில் இருந்து ராஞ்சி நோக்கி ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, நிலக்கரி சுமை ஏற்றிய மிதிவண்டிகளுடன் சென்ற இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
Advertisement
Advertisement
அந்த புகைப்படங்களை வெளியிட்டு எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவிட்டது:
“நாள்தோறும் 200 கிலோ எடையுள்ள நிலக்கரியை மிதிவண்டிகளில் சுமந்து கொண்டு 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இளைஞர்களின் வருமானம் பெயரளவுக்குதான் உள்ளது.
அவர்களுடன் நடக்காமல், அவர்களின் சுமையை உணராமல் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது. இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் கட்டமைப்புச் சக்கரம் நின்றுவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.