பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்?: மத்திய அரசு பதில்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
புது தில்லி: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பான கேள்விக்கு அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘அதிககாலம் புழக்கத்தில் இருக்கும் வகையிலும், கள்ளநோட்டுகளைத் தடுக்கும் வகையிலும் ரூபாய் நோட்டுகளை தரம் உயா்த்த தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 2022-23-ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசா்வ் வங்கிக்கு ரூ.4,682.80 கோடி செலவானது.
‘கிரிப்டோ கரன்சி’ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட எந்த நிதிசாா்ந்த வா்த்தகத்தையும் மேற்கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.