ஒடிசா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சக்ரதாரி சரண் சிங் 
இந்தியா

ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சக்ரதாரி சரண் சிங் பதவியேற்பு!

ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங் புதன்கிழமை பதவியேற்றார். 

DIN


ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங் புதன்கிழமை பதவியேற்றார். 

ஒடிசா உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு  ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ஜனவரி 20, 1963ல் பிறந்த நீதிபதி சிங், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் முடித்து 1990ல் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்பட்டார். 

1998ல் மத்திய அரசில் கூடுதல் நிலை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவர், 2001 வரை தொடர்ந்தார். சிங் பிகாரில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். மேலும், 2012ல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வரை தொடர்ந்தார். 

கடந்த 2023ல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். கடந்த வாரம் குடியரசுத் தலைவர் முர்மு, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த நிலையில், ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சக்ரதாசி சரண் சிங் நியமிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT