முகப்பு
இந்தியா

தேர்தல் மேடையோ, அவையோ, மோடி கூறுவது பொய் மட்டுமே: ராகுல்

மேடையாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்தும் பொய்மட்டுமே என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (பிப். 7) தெரிவித்துள்ளார்.  

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:


மேடையாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்தும் பொய்மட்டுமே என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (பிப். 7) தெரிவித்துள்ளார்.  

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்றும், மாநிலங்களவையில் இன்றும் உரையாற்றினார். இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். 

இதனிடையே பிரதமர் மோடியின் உரைக்கு பதிலளித்து சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 

தேர்தல் மேடையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்துமே பொய்களின் குவியல்தான்.

அவர் தனது பொய்களிலும், அவரது கைதட்டல்களிலும், ஊடகங்களிலும் மூழ்கி, பொதுமக்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை கோபப்படுத்துகிறது. கோபம் அழிவுக்கு உத்தரவாதம், வளர்ச்சி அல்ல என விமர்சித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →