இந்தியா

தில்லியில் இன்று பினராயி விஜயன் தர்னா: கேஜரிவால், பகவந்த் மான் பங்கேற்பு

மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் தர்னா போராட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்கவுள்ளனர்.

DIN

மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் தர்னா போராட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்கவுள்ளனர்.

கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் தில்லி ஜந்தர்மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசு சாா்பில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் தா்னா போராட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தர்னாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசை கண்டித்து தில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT