முகப்பு
இந்தியா

ராமர் கோயிலுக்கு இரண்டாம் முறை சென்ற அமிதாப் பச்சன்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக சென்றுள்ளார். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:59 PM
நடிகர் அமிதாப் பச்சன்
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் அயோத்தி ராமர் கோயிலில் இரண்டாவது முறையாக தரிசனம் செய்தார். மூத்த பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இன்று (பிப்.9) மதியம் அயோத்தி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

ராமர் கோயிலுக்குள் அவர் அரைமணிநேரம் செலவழித்துள்ளார். தரிசனம் செய்துவிட்டு, வெளியிலிருந்து கோயிலை சுற்றிப்பார்த்துள்ளார். சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்ட அமிதாப் பச்சன் ஃபைசாபாத் நகரில் மதிய உணவை முடித்துள்ளார். 

'அமிதாபச்சனோடு நன்றாக நேரம் செலவழித்தோம். அவருடன் கலாச்சாரம் மற்றும் கலைகளைப் பற்றி பேசினோம்' எனக் காவல் ஆணையர் தயால் தெரிவித்தார். 

அமிதாப் பச்சன் ஏற்கனவே ஜனவரி 22ல் நடைபெற்ற ராமர் கோயில் திறப்புவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →