இந்தியா

மோடி ஆட்சியில் ராமர் கோயில் கனவு நிறைவேறியது: அமித் ஷா

மோடி ஆட்சியில் ராமர் கோயில் கனவு நிறைவேறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

DIN

மோடி ஆட்சியில் ராமர் கோயில் கனவு நிறைவேறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த ஜன.22ல் ஸ்ரீராமபிரான் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராமர் கோயில் குறித்து மக்களவையில் விவாதம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பால் நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் திறக்கப்பட்ட மகிழ்ச்சி நாடு முழுவதும் பரவுயுள்ளது. ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது. 1528ல் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்துள்ளது. இந்த விவகாரம் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

மோடி ஆட்சியில் இந்த கனவு நிறைவேறியுள்ளது. ஜனவரி 22, வரும் ஆண்டுகளுக்கு ஒரு வரலாற்று நாளாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

மின் பாதுகாப்பு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT