இந்தியா

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தி இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகராக இருந்து பாஜக தலைவராக மாறிய 76 வயதாகும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இன்று காலை நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 

கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான "மிரிகயா" என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். 

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கடந்த மாதம் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT