சந்தோஷ் பங்கார் குழந்தைகளிடம் பேசும்போது... 
இந்தியா

குழந்தைகளே, 2 நாள்கள் சாப்பிடாதீர்கள்: சர்ச்சையான எம்எல்ஏ விடியோ

பெற்றோர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை எனில் சாப்பிட வேண்டாம் என குழந்தைகளிடம் எம்எல்ஏ வலியுறுத்திய விடியோ வைரலானது.

DIN

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனை கட்சி எம்.எல்.ஏ, குழந்தைகளிடம் அவர்கள் பெற்றோர் தனக்கு வாக்களிக்காவிட்டால் இரண்டு நாள்கள் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

கலாம்நூரி எம்எல்ஏ சந்தோஷ் பங்காரின் இந்த செயல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட குழந்தைகளை தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்கிற வழிகாட்டுதலை மீறுவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த காணொலியில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் எம்எல்ஏ பேசுவது இடம்பெற்றுள்ளது.

அவர்,  “அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்கு அளிக்கவில்லையெனில் 2 நாள்களுக்குச் சாப்பிடாதீர்கள்” எனத் தெரிவித்துல்ளார்.

மேலும், பெற்றோர் ஏன் சாப்பிடவில்லை எனக் கேட்டால் சந்தோஷ் பங்காருக்கு வாக்களியுங்கள், அப்போதுதான் சாப்பிடுவோம் எனச் சொல்லுமாறு அவர் கேட்டதோடு அதனை திருப்பி ஒப்பிக்கவும் செய்கிறார்.

முன்முடிவுகளற்று ஆணையம் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பங்கார் இப்படியான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருபவர். சமீபத்தில் 2024-ல் மோடி மீண்டும் பிரதமராகவில்லையெனில் தான் தூக்கிட்டு கொள்வதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT