ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் மீது ராணுவம் துப்பாக்கி சூடு
மெந்தர் / ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ட்ரோன் மீது ராணுவ வீரர்கள் இரண்டு முறை துப்பாக்கி் சூடு நடத்தியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நேற்று இரவு இந்திய நிலப்பரப்பில் சிறிது நேரம் வட்டமடித்த ட்ரோன் இந்திய துருப்புக்களின் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள முடியாமல், ட்ரோன் பாகிஸ்தான் தரப்புக்குத் திரும்பியது. இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சமீபத்தில் போதைப்பொருள், ஆயுதங்கள் அல்லது வெடிக்கும் பொருட்கள் அல்லது பறக்கும் ட்ரோன்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்க வெகுமதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.