அயோத்தியில் கேஜரிவால், பகவந்த் மான் 
இந்தியா

அயோத்தியில் கேஜரிவால், பகவந்த் மான்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனர்.

இந்த கோயிலின் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அரவிந்த் கேஜரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்திருந்தார்.

அயோத்தியில் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் குடும்பத்தினர்

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் இன்று தரிசனம் மேற்கொண்டனர்.

தரிசனன் குறித்து எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேஜரிவால், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT