தில்லி எல்லையில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு
தில்லி எல்லையில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு -
இந்தியா

தில்லி முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை அமல்!

DIN

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நாளை(பிப்.13) தில்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி நோக்கிச் செல்லவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கடந்த 2020 போராட்டம் போன்ற சூழல் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தில்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12 வரை 144 தடை பிறப்பித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தில்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், டிராக்டர், லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

SCROLL FOR NEXT