முகப்பு
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கேவுடன் தமிழக காங். பொறுப்பாளர் ஆலோசனை!

தமிழக காங்கிரஸ் நிலைமை, தமிழக அரசியல் நிலை, ஆந்திரத்தில் அரசியல் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On : 14 பிப்ரவரி, 2024 at 11:09 AM
மல்லிகார்ஜுன கார்கேவுடன் சிரிவெல்ல பிரசாத்
பகிர்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத் இன்று (பிப். 14) ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும், ஆந்திரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் ரீதியான மேம்பாடுகள் குறித்தும் கார்கேவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தொகுதி வரையறை மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டணிகளுடன் தொகுதி வரையரை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சிரிவெல்ல பிரசாத்

அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் நிலை, தமிழக அரசியல் நிலை, ஆந்திரத்தில் அரசியல் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்ததாக சிரிவெல்ல பிரசாத் தனது சமூகவலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →