இந்தியா

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

DIN

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிப்.17-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைகோளுடன் ராக்கெட் வெற்றிகரமாக பயணிக்கும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்சாட் செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பாகம் தனியாக பிரிந்தது. செயற்கைக்கோளை நிலை நிறுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

திட்டமிட்டபடி இலக்கை ராக்கெட் எட்டியது. இன்சாட் 3டிஎஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் செயல்பாடு திருப்தியாக உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும்.

இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை (பிப்.16) மாலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!!

தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விருப்பம்?

பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

இந்தியர்களின் இயல்பாக சுற்றுலா மாறிவிட்டது! சுமன் பில்லா

SCROLL FOR NEXT