அகிலேஷ் யாதவ் 
இந்தியா

ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்பா? அகிலேஷ் யாதவ் பதில்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்பது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விளக்கம்.

DIN

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்பது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நிதிப் பயணம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த பயணத்தில் சமாஜ்வாதி தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், ரேபரேலியில் நாளை ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அகிலேஷ் யாதவ், “தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அவர்கள் தரப்பு கோரிக்கையை அளித்துள்ளார்கள். நாங்களும் பதில் அளித்துள்ளோம். தொகுதி பங்கீடு நிறைவடைந்தவுடன் ராகுல் காந்தி நடைப்பயணத்தில் சமாஜ்வாதி பங்கேற்கும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT