தில்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் 
இந்தியா

கேஜரிவால் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம்: தில்லி அமைச்சர்!

ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு ஆட்சி அமைப்பது கடினமாகிவிடும்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என தில்லி அமைச்சரும், ஆத் ஆத்மி கட்சியின் தலைவருமான சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது,

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்னும் ஓரிரு நாள்களில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வந்துள்ளது. மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி பல மாநிலக் கூட்டணி அமைத்தால், அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்படுவார். கேஜரிவால் பாதுகாப்பாக இருக்க ஒரே ஒரு வழி, அது காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் எங்கு கூட்டணி அமைத்தாலும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்று பாஜக பயப்படுவதாகவும் பரத்வாஜ் கூறினார்.

பாஜக மிகவும் பதட்டமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இணைந்து எங்குக் கூட்டணி அமைத்தாலும், பாஜகவுக்கு ஆட்சி அமைப்பது கடினமாகிவிடும் என்று அவர் கூறினார்.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்துப் பேசிய பரத்வாஜ், அனைத்து அறிவிப்புகளும் (அனைத்து மாநிலங்களுக்கும்) ஒன்றாக வெளியிடப்படும். விவாதங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT