முகப்பு
இந்தியா

மாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு

பள்ளி மீது புகார்: மாணவன் தற்கொலைக்கு காரணமா?

Updated On : 23 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து இறந்த மூன்று நாள்களுக்குப் பிறகு பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தில்லி காவல்துறை.

தற்கொலைக்குத் தூண்டியதாக மாணவனின் பெற்றோர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி சங்கர்விஹாரில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளியில் படித்து வந்த மாணவன் வீட்டில் துப்பாட்டா பயன்படுத்தி தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

மாணவனுக்கு தேர்வெழுத அனுமதி சீட்டு தரவில்லையென்றும் பள்ளியில் நாற்காலியை உடைத்ததற்காக பெரிய தொகையை அபராதமாக பள்ளி நிர்வாகம் கேட்டதாகவும் மாணவனின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது மகன் மற்றும் மனைவியிடம் பள்ளி நிர்வாகம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →