முகப்பு
இந்தியா

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறதா?

அடுத்த 3 மாதங்களுக்கு ’மனதின் குரல்’ நிகழ்ச்சி நடைபெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 2:15 PM
பகிர்:

பிரதமர் மோடி இன்று(பிப்.25) 110-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, மனதின் குரல் நிகழ்ச்சி அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறாது என்று தெரிவித்தார்.

விரைவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் சூழல் உள்ளதாகவும், இதன்காரணமாக, அரசியல் தார்மீகப்படி மனதின் குரல் நிகழ்ச்சி 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அவர் கூறினார்.

மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு, நாட்டின் ஒருங்கிணைந்த வலிமை மற்றும் சாதனைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது மக்களுடைய நிகழ்ச்சி எனவும், மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதாகவும் பெருமிதம் கொண்டார். முதன்முறை வாக்களர்களை நாட்டுக்காக தங்கள் வாக்குகளை கட்டாயம் அளிக்கும்படியும் அவர் வலியுறுத்தி பேசினார்.

111-வது மனதின் குரல் நிகழ்ச்சியில், நாம் அனைவரும் அடுத்த முறை சந்திப்போம். இதைவிட சிறந்தது எதுவுமில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →