முகப்பு
இந்தியா

இந்தியாவின் கிராமப்புறங்களில் பொருளாதார நெருக்கடி: காங்கிரஸ்

பிரதமரின் வாரண்டி முடிவடையும் நிலையில், அவர் உத்தரவாதங்களை வழங்குகிறார். ஆனால்..

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

இந்தியாவின் கிராமப்புறங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறுகையில்,

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் என 2017ல் வாக்குறுதி அளித்ததாகப் பிரதமர் மோடியின் உத்தரவாதங்கள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.

கிராமப்புறங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகவும், இருசக்கர வாகன விற்பனை 2017-18ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022-23ல் 22 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்நியாய காலம் நிகழ்ந்து வருவதால் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்.

காங்கிரஸ் தனது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி விவசாயிகளுக்கு நியாயம் வழங்கும். பிரதமரின் வாரண்டி முடிவடையும் நிலையில், அவர் உத்தரவாதங்களை வழங்குகிறார். ஆனால் மக்கள் அதை விடப் புத்திசாலிகள்! என்று அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →