பிருந்தா காரத், ராகுல் காந்தி 
இந்தியா

வயநாட்டில் போட்டியிடுவது குறித்து ராகுல் யோசிக்க வேண்டும்: பிருந்தா காரத்

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி யோசிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

DIN

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி யோசிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சாா்பில் மக்களவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பினோய் விஸ்வம் திங்கள்கிழமை அறிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி.-ஆக உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்ததாவது,

“வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜன் போட்டியிடவுள்ளதாக அக் கட்சி அறிவித்துள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகவும் உள்ளார். பாஜகவுக்கு எதிராக போராடுவதாக கூறும், காங்கிரஸும், ராகுல் காந்தியும் யோசிக்க வேண்டும். கேரளத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? அதனால், அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து யோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

இயல்கள் இசங்கள் நிஜங்கள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)

பேரலையின் சாட்சியம்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

SCROLL FOR NEXT