மனோஜ் பாண்டே 
இந்தியா

சமாஜ்வாதியின் தலைமை கொறடா ராஜிநாமா!

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக 8 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி பாஜக 7 இடங்களிலும், சமாஜ்வாதி 3 இடங்களிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

இருப்பினும், சமாஜ்வாதியின் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கட்சி தலைமையில் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜிநாமா செய்துள்ளார். இதனால், உபி மாநிலங்களவை தேர்தலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம்

கீழ்படப்பை வீரட்டீஸ்வா் கோயிலில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் ரூ. 3.20 கோடியில் முதல்வா் படைப்பகம் அமைக்க பூமி பூஜை: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

பிற்படுத்தப்பட்டோருக்கு கடனுதவி குறித்து பரிசீலனை

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் அன்னாபிஷேக வழிபாடு

SCROLL FOR NEXT