இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் 
இந்தியா

ஆதித்யா விண்கலம் ஜன.6-ல் ‘எல் 1’ புள்ளியை அடையும்!

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

DIN

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியது:

"ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். செயற்கைக்கோள்களுக்கு தேவையான சாதனங்கள் தயாரித்தல், சோதனையை நிறைவு செய்தல் போன்றவை சரியாக நடைபெறும் பட்சத்தில் அதிகளவில் விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளது. 

இந்தாண்டு ககன்யான் திட்டத்திற்கான தேவையானவற்றை தயார் செய்யும் ஆண்டாக அமையவுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்படவுள்ளன. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளும் செலுத்தப்படவுள்ளன.

ஆதித்யா எல் 1 விண்கலம் வருகின்ற 6-ஆம் தேதி எல் 1 புள்ளியை அடையும். அதன்பிறகு இறுதிகட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT