இந்தியா

ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

DIN

மும்பை: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் கண்டிவாலி தொகுதி எம்.எல்.ஏ. வான அதுல் பட்கல்கர் இன்று தெரிவித்தார்.

அதே வேளையில், இந்த விடுமுறையானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்த வேண்டும். விடுமுறை அறிவிக்கும் பட்சத்தில் அனைவரும் இந்த நிகழ்வை காண இயலும் என்று அவர் முன் பதிவு செய்யப்பட்ட விடியோவில் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், புதிதாக கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு நடைபெறும் என்றார்.

குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT