இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டத்தில் செல்லிடப்பேசிகளை திருடிய 37 பேர் கைது!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது செல்லிடப்பேசிகளை திருடியதாக 37 பேரை கோவா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது செல்லிடப்பேசிகளை திருடியதாக 37 பேரை கோவா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

நாடு முழுவதும் நேற்று மாலை முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. வடக்கு கோவாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டிலிருந்து கோவாவுக்கு வருகை புரிந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் செல்லிடப்பேசிகளை திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: இதுவரை 37 பேர் செல்லிடப்பேசிகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள 90 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மூன்று கும்பல்களும் தனித் தனியாக செயல்படுவது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது செல்லிடப்பேசிகள் திருட்டு சம்பவம் பாதியாக குறைந்துள்ளது. திருடுபோன செல்லிடப்பேசிகளும் அதிக அளவில் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

SCROLL FOR NEXT